Who We Are
About Us
பா பார்ச்சூன் ரியல்டி கன்சீல் நிறுவனம் சா.மு. பரஞ்சோதி பாண்டியன் மற்றும் வழக்கறிஞர் அதிஷ்டலக்ஷ்மி ஆகிய இரு அர்பணிப்புள்ள தொழில் முனைவர்ககளால் 2020-இல் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி இருவரின் தொழில் அனுபவங்கள் மூலம் கற்றுக் கொண்ட விசயங்கள் மூலம் சாதாரண பொது ஜனங்களில் நிலச்சிக்கல்களை தீர்த்துக்கொடுப்பதற்கு தகுந்த பொது அதிகார அமைப்பிற்கு ஆவண தயாரிப்பு உதவிகளையும் மனு தயாரித்தல் உதவிகளையும் நல்லபடியாக சட்ட அந்தஸ்துடன் செய்து கொடுக்கின்ற சேவை நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“மனிதர்கள் தூங்கினாலும் மனுக்கள் தூங்காது” அவை அரசு இயந்திரத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும் அரசிற்கு சாதாரண பொது ஜனங்களின் நில சிக்கல்களை, பிரச்சச்சனைகளை புரிய வைக்க வேண்டும் என்றால் மனு மொழி மூலமாக தான் புரிய வைக்க வேண்டும் சாமானிய மக்களாக இருக்கட்டும், கற்றறிந்த வழக்கறிஞர்களாக இருக்கட்டும், ஆவண எழுத்தராக இருக்கட்டும், அனைவருக்கும் மனுக்களை திறம்பட எழுதுவதற்கு அதனுடைய வரைவுகளை (DRAFT) தயாரிப்பதற்கு நிறைய நுண் மான் நுழை புலன்கள் தேவைப்படுகிறது. மேற்படி நுண் மான் நுழை புலத்துடன் கடந்த 4 ஆண்டுகளாக நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கிறது.
சிவில் வழக்குகள், வழக்குகள் மேல் முறையீடுகள் மற்றும் திருத்தங்கள், SLPs, DRD, விவகாரங்கள் மற்றும் நடுவர் நடவடிக்கைகள்
வருவாய் பிழைகள், வருவாய் கோட்ட அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் நில நிர்வாக ஆணையர், மனுக்கள், முறையீடுகள், திருத்தங்கள், பிரதிநிதித்துவ நடவடிக்கைகள், DTCP, CMTA மனுக்கள், மேல்முறையீடுகள், திருத்தங்கள் மற்றும் பதிவுதுறை ஆவணங்களான, விற்பனை, குத்தகை, தீர்வு, வெளியீடு, உயில், பாக பிரிவினை, பவர் ஆஃப் அட்டர்னி மற்றும் பிற ஆவணங்கள், அரை நீதித்துறை , HRNCE, வஃப் மற்றும் பிற அரை நீதித்துறை அதிகாரிகள், தொடர்புடைய ஆலோசனைகள்,மனுக்கள் மற்றும் அதிகாரிகள் முன் தோன்றுதல், அனைத்து வகையான ஆவண ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் சங்ககங்களின் பதிவுகளுக்கான ஆவணங்கள், பழைய தமிழில் இருந்து புதிய தமிழ், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் பிரெஞ்சுலிருந்து தமிழ் தமிழ், கன்னடத்திலிருந்து தமிழ் உருதுலிருந்து தமிழ் தெலுங்கிலிருந்து தமிழ் என்று பழைய பத்திரங்களை பழைய வருவாய் துறை ஆவணங்களை நீதி மன்ற ஆவணங்கள் சிறந்த முறையில் மொழிபெயர்த்தல் அனைவருக்கும் சரியான சட்ட மொழிபெயர்ப்புகள், RTI மனுக்கள் மேல்முறையீடு மனுக்கள் தீராய்வு மனுக்கள் தயாரித்து தகவல்கள் பெற்று தருதல் சேவை, தேவைக்கேற்ப உயர்நீதி மன்ற மற்றும் உச்ச நீதி மன்ற DRT நீதி மன்றங்களுக்கு மூத்த மற்றும் சிறந்த வழிகாட்டிகளை ஏற்பாடு செய்து தருதல் இது போன்ற நிலம் சார்ந்த சட்டம் சார்ந்த சேவைகளை சாமானியனுக்கும் எளிமையான முறையில் கிடைக்கும் வகையில் பா பார்சூன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது